தம்புள்ளை மருத்துவமனையின் சிகிச்சை குறித்த ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு…

சர்ச்சையினை கிளப்பியுள்ள தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறும் அறுவை சிகிச்சை சம்பவம் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளின் அறிக்கையானது இன்று(13) கையளிக்கப்பட உள்ளதாக தம்புள்ளை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் சாள்ஸ் நுகவெல தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் பிரசவ வார்ட்டுகளில் குழந்தை பிரசவத்தின் பின்னர் வைத்தியசாலையை விட்டு வெளியேறும் தாய்மார்களுக்கு பலவந்தமாக கருத்தடை உபகரணங்கள் பொருத்தப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்தியினைத் தொடர்ந்தே குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக ஆரம்ப விசாரணையானது மத்திய மாகாணம் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடமும் தம்புள்ளை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் சாள்ஸ் நுகவெல ஆகியோரது தலைமையிலும் இடம்பெற்றது.

அதன்படி, ஆரம்ப விசாரணை அறிக்கை இன்று (13) சுகாதார அமைச்சிடம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)