அசங்க குருசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு அர்ஜுன ரணதுங்க பதிலடி…

தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைவதற்கு தாம் தயாரில்லையென முன்னாள் கிரிக்கெட் அணி தலைவரும் , துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சருமாகிய அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்க குருசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு முதன் முறையாக பதிலளிக்கையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

நேற்று(12) உடுகம்பலவில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய வினாக்களிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிடுவதன் காரணமாக அசங்க குருசிங்கவினால் தன்னுடைய கடைமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு சந்தர்பம் கிட்டாதென தெரிவித்தார்.

´கடந்த 20 ஆண்டுகளாக இந்நாட்டில் என்ன நடந்ததென அசங்க குருசிங்க அறிந்திருக்கவில்லை. எவ்வாறான அரசியல் தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டன? எவ்வாறான களவுச் செயல்கள் இடம்பெற்றன? எவ்வாறான தவறிழைத்த நபர்கள் விளையாட்டில் ஈடுப்பட்டார்கள்? என அசங்க குருசிங்க அறிந்திருக்கவில்லை.

தற்போதைய கிரிக்கெட் நிர்வாகிகள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அசங்க குருசிங்க , என்னுடைய சகோதர விளையாட்டு வீரருக்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நிர்வாகத்தில் உள்ளவர்கள் அரசியல் தலையீடுகளை மேற்கொள்கின்றார்கள். அவர்களுடைய நண்பர்களின் பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஈடுப்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்குகின்றார்கள். அண்மையிலும் இவ்வாறானதோர் சம்பவம் பதிவாகியது. இந்நடவடிக்கை காரணமாக கிரிக்கெட் நிர்வாகத்தின் புகழுற்கு கலங்கம் ஏற்பட்டுள்ள..” எனவும் தெரிவித்தார்.

 

(rizmira)