இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நாளை(15) கொழும்பில் நடைபெற இருக்கிறது. இது பங்களாதேஷ் அணிக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும்.
100-வது டெஸ்டில் பங்கேற்க பங்களாதேஷ் வீரர்கள் ஆவலாக உள்ள நிலையில், அந்த அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மெஹ்முதுல்லா கொழும்பு டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
காலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் மெஹ்முதுல்லா 8, 0 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் அரைசதம் அடித்தார். அதற்கு முன் 10 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இதனால் கொழும்பு டெஸ்டில் இருந்து மெஹ்முதுல்லா நீக்கப்பட்டிருக்கிறார். அதேசமயம் அவர் கொழும்பில் இருப்பாரா அல்லது தாய்நாடு திரும்புவாரா.. என்பது அவரது தனிப்பட்ட முடிவு என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஹசன் மேலும் தெரிவித்துள்ளார்.