சைட்டம் குறித்து ஹெல உறுமய’விடமிருந்து அரசுக்கு மூன்று திட்டங்கள்…

சர்ச்சைக்குரிய பிரச்சினையான மாலபே, சைட்டம் தனியார் வைத்தியசாலை குறித்து உடனடியாக நடைமுறைப்படுத்த மூன்று திட்டங்களை ஜாதிக ஹெல உறுமய இனால் நேற்று(14) அரசுக்கு முன்வைத்ததாக அக்கட்சியின் பிரதிப் பிரதம செயலாளர் அனுருத்த பிரதீப் நேற்று(14) ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

1. சைட்டம் மருத்துவக் கல்லூரியினை உடனடியாக தடை செய்தல்.

2. தற்போது உள்வாங்கப்பட்டுள்ள மாணவர்களுள் அதிகபட்சமானோருக்கு வைத்தியராவதற்கு வாய்ப்பினை வழங்க விசேட குழுவொன்றினை நியமித்தல்.

3. நீக்கப்படும் மாணவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையினை வழங்குதல்.

மேலும், குறித்த மூன்று திட்டங்களுக்கு அப்பால் மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடமாக சைட்டம் திருத்தப்படுவது நல்லது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)