தடையின்றிய மின்சாரம் விநியோகம் வழங்கப்படும் – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய….

இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் இன்று(15) தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ள நிலைமையில் மின்சாரம் விநியோகம் தடையாகாது என மின்வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டாலும் மின்விநியோகம் தொடர்ச்சியாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின்சார சபை பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த இந்தக் குழு ஆறு மாத காலத்தில் பிரச்சினைக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இன்று மேற்கொள்ள உள்ள தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்திய போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

(rizmira)