டோனிக்கு ஆப்பு வைக்கும் கோஹ்லி – இந்திய அணி பிளவில்

இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களிடையே சில முரண்பட்ட கருத்து நிலவுவதால், அணி பிளவுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் துணை அணித்தலைவர் விராட் கோஹ்லி, டோனி மீது பாசமாக இருப்பது போன்று இருந்தாலும் அவருக்கு ஆப்பு வைக்க காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கோஹ்லி, ரோஹித் சர்மா, ரஹானே ஆகியோர் ஐ.பி.எல் போட்டிகளில் தங்கள் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் டோனி தலைமையிலான இந்திய அணி என்று வரும் போது சொதப்பி தள்ளுகின்றனர்.

இதற்கு ஏற்றது போல் வங்கதேசத்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பிரீ-ஹிட் பந்தை கோஹ்லி அடிக்க நினைக்காததும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சென்னை அணி வீரர்களான ஜடேஜா, அஸ்வின், ரெய்னா ஆகியோருக்கு டோனி தான் வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

அதிலும், ஜடோஜா பல போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்தாலும், டோனி அவருக்கு ஆதரவாக செயல்படுவது கோஹ்லி தரப்பு வீரர்களுக்கு ஒருவித மனகசப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

டோனியும் சரியான பார்மில் இல்லை. அவர் உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்னே பார்மை இழந்து விட்டார். அணித்தலைவர் என்ற பதவியை வைத்து தான் அணியில் இருக்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுகிறது.

வீரர்களிடையே ஏற்பட்டிருக்கும் பிளவால் தான் இந்திய அணி வங்கதேசத் தொடரை இழந்தது என்று கூறப்படுகிறது