இடம்பெயர்ந்த மக்களையும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யும் விசேட சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை நாடாளுமன்றுக்கு கொண்டு வருவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் மற்றும் இயற்றை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுள் சிலர் நிரந்தர முகவரிகளின்றி இடம்பெயர்ந்தவர்களாகவும் அகதிகளாகவும் தொடர்ந்தும் வசித்து வரும் நிலைமை நாட்டில் காணப்படுகின்றது.
இந்நிலையில் இடம்பெயர்ந்தோர் தொடர்பில் விசேட உறுப்புரைகளை உள்ளடக்கி சட்ட வரைஞரினால் தயாரிக்கப்பட்ட வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் அதனை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைப்பதற்கும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.