இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனுக்கு சார்பாக சட்டத்தரணிகள் குழுவொன்றுக்கு ஆஜராக, ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு 3 வாரங்கள் கடந்துள்ள நிலையில், ஆணைக்குழுவுக்கு சென்று அர்ஜுன் மஹேந்திரனுக்காக ஆஜராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா அனுமதி வேண்டியுள்ளார்.
மஹேந்திரனுக்காக ஆஜராகவுள்ள சட்டத்தரணிகள் குழுவின் பெயரும் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.