இந்தியா மற்றும் பங்களாதேஷ் இலங்கையுடனான T20 முக்கோணச் சமருக்கு ஆயத்தம்…

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய 03 அணிகள் மோதும் T-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் வருடம் இலங்கையில் நடத்தப்படவுள்ளது.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “சுதத்திரக் கிண்ணம் “ என்ற பெயரில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை குறித்த கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ளது.

பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மேற்குறித்த தகவல் அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)