தென்கொரிய அதிபரின் பதவி நீக்கத்தை அடுத்து மே மாதம் ஜனாதிபதித் தேர்தல்…

ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹை பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தென் கொரியா எதிர்வரும் மே 9-ல் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது.

தென்கொரிய சட்டத்தின்படி, அதிபர் பதவி விலகிய 2 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும் அந்நாட்டு சட்டம்.

நாட்டின் விவகாரங்களில் தன்னுடைய தோழி சோய் சூன்-சில்லை தலையிட அனுமதித்தன் மூலம், தென் கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹை’யை பதவி நீக்கம் செய்து அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)