தான் இங்கிலாந்து கிரிக்கெட் கழகத்திற்காகவும் திறமையாக விளையாடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று(15) இரவு தனியார் வானொலி அலைவரிசை ஒன்றில் ஒலிபரப்பாகிய நிகழ்ச்சி ஒன்றிலேயே மேற்குறித்த கருத்தினை அவர் தெரிவித்திருந்தார்.
இந்நாட்டு அரசியல் வாதிகள் தங்களது சுயலாபத்தினை மாத்திரமே எண்ணி வாழ்கிறார்கள். தானும் அவ்வாறு நினைத்திருந்தால் இங்கிலாந்து அணியில் இன்றும் விளையாடி சொத்து செல்வங்களோடு இருந்திருப்பேன். இந்நாட்டு மக்களுக்காக சேவை செய்யவே தான் எண்ணுகின்றதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.