2008ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட முகாமையாளராகக் கடமையாற்றிய டொக்டர் ராஜா ஜோன்புள்ளேயின் வீடு மற்றும் மருத்துவ நிலையம் தீ வைக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மிஹிந்தலை பிரதேச சபை உறுப்பினர் அனில் புஷ்பானந்த மற்றும் நிமல் காமினி ஜெயசூரிய ஆகிய இருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருவருக்கு 19 வருடங்களும் மற்றுமொருவருக்கு 6 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணை, வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரத்ன முன்னிலையில், நேற்று(15) விசாரணைக்கு வந்திருந்த நிலையில் இன்று(16) குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு இடம்பெற்ற வடமத்திய மாகாணசபைத் தேர்தலின் பிரசார நடவடிக்கைகளின் போது, ராஜா ஜோன்புள்ளேயின் வீடு மற்றும் மருத்துவ நிலையம் தீ வைக்கப்பட்டதால், அவருக்கு சுமார் 500 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.