அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று…

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் மற்றும் ஓய்வு பெறவுள்ள அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று(17) பனாகொட இராணுவ முகாமில் நடைபெறவுள்ளது.

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் மற்றும் ஓய்வு பெறவுள்ள அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் உள்ளிட்ட 2,000 வீரர்கள்,ஊதியம் மற்றும் கொடுப்பனவு பதிவுகள் பணியகம், நலன்புரி நிர்வாக பணிப்பாளர், பணியாளர் நிர்வாக பணிப்பாளர் ஆகிய நிலையங்களில் பணிபுரியும் இராணுவ அதிகாரிகள் ஆகியோரிடையே படைவீரர்களின் நடப்பு விவகாரங்கள் பணியகத்தின் தலைமையில் குறித்த இந்த கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் வழிகாட்டல்களுக்கமைய அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தொடர்பான பிரச்சினைகள், நிர்வாக செயற்பாடுகள், மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)