தங்காலை தொகுதியைச் சேரந்த மூன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சர்களாக பதவி வகிப்பதன் காரணமாக, அமைச்சரவையின் கடற்றொழில் துறை அமைச்சரை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மாகம் ருஹூணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “அமைச்சரவை அந்தஸ்துள்ள கடற்றொழில் அமைச்சராக மஹிந்த அமரவீர உள்ளதுடன், அதன் இராஜாங்க அமைச்சராக திலிப் வெதஆராச்சி உள்ளார், தென் மாகாண சபையின் கடற்றொழில் துறை அமைச்சராக எச்.குணசேகர உள்ளதை நான் இன்று அறிந்துகொண்டேன்.
இவர்கள் மூவரும், தங்காலை தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவியில் மாற்றம் செய்வது ஏற்றது என, நான் யோசனை செய்துள்ளேன்” என, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதன்காரணமாக, நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய, விசேடமாக ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளுக்கு அதிகூடிய சேவையாற்றக்கூடிய அமைச்சுப் பதவியை அமரவீரவுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளேன்” என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.