இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நேற்று(16) தொடங்கிய 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வீரர் ரென்ஷா 119 வருட கிரிக்கெட் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
ஏலவே புனே, பெங்களூரு ஆகிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த ரென்ஷா, 20 வயதே ஆனவர்.
இவர் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி 44 ஓட்டங்களை எடுத்த போது 500 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.
மேலும் 20 வயதில் 500 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையை பெற்றார்.
இதற்கு முன்னர் கிளெம் ஹில் 21 வயதிற்குள் 482 ஓட்டங்கள் குவித்திருந்தார்.
இதுதான் 20 வயதுக்குள் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக இருந்த நிலையில் இந்த சாதனையை நேற்று ரென்ஷா முறியடித்துள்ளார்.