களுத்துறையில் சிறைச்சாலை பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபருக்கு, அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி வலஹன்துவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் பின்னர் ஒரு வாரத்திற்கு அந்த பெண் அடைக்கலம் வழங்கியுள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை,துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது உளவு பார்த்ததாக கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபரையும் பாணந்துறை பின்வத்த பகுதியில் நேற்றிரவு(16) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சகல சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் தமது பிரதேசங்களில் தப்பிச் சென்று தலைமறைவாகியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
சந்தேக நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.