உலகில் தானியங்கி கார்களை தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் B.M.W நிறுவனமும் தானியங்கி கார்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மற்ற நிறுவனங்களை போன்று இல்லாமல் B.M.W நிறுவனத்தின் தானியங்கி கார் Level-5 தானியங்கி முறைகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மனிதர்களை போன்று எவ்வித சூழ்நிலையிலும் சாதூர்யமாக முடிவுகளை எடுத்து தானாகவே இயங்கும் படி Level-5 தானியங்கி முறை இருக்கும்.
Level-5 தானியங்கி முறைகள், சிறிதளவும் ஓட்டுநரின் ஒத்துழைப்பு இன்றி சாலைகளில் சாதூர்யமாக செல்லும். இந்நிலையில் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வரும் தானியங்கி கார்களில் Level-2 அல்லது Level-3 என்ற தானியங்கி முறைகள் மட்டுமே வழங்கப்படுகிறது.
Level-2 மற்றும் Level-3 தானியங்கி முறைகளில் ஓட்டுநரின் கவனம் நிச்சயம் தேவை என்பதால் அனைத்து வித சாலைகளிலும் தானியங்கி முறையில் செல்லாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய தானியங்கி கார்களை தயாரிக்க B.M.W நிறுவனம் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த தானியங்கி தொழில்நுட்பங்களை உருவாக்கும் மொபைல் ஐ நிறுவனங்களுடன் சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானதும் குறிப்பிடத்தக்கது.