லசந்த கொலை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு…

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்ட பல தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களம், கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(20) சமர்ப்பித்துள்ளது.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் அவரின் கீழ் செயற்பட்ட குழு தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)