அரசாங்கத்தில் தாம் இணைந்து கொள்ளப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மிகவும் பலம் பொருந்திய பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாகவும், அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதாகவும் வெளியான தகவல்களில் எவ்வித உண்மை நிலையம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் மட்டுமே தாம் பங்குபற்றியதாகத் தெரிவித்துள்ள அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றமையானது அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு என அர்த்தப்படாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.