பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட எழுவர் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர எதிர்வரும் 30ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (23) பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது நீதவான் தினேஸ் லக்மால் பெரேரா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் காவத்தை கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ததாக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட சிலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் 6 பேரும் எதிர்வரும் 30ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.