நீதிமன்ற உத்தரவுப்படி பதிவாளர் அறையில், நடிகர் தனுஷின் அங்க அடையாளங்களைப் பதிவாளர் முன்னிலையில் தனியறையில் சரிபார்க்கப்பட்டுள்ளது
அதன் விவரம்:
பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட்டபடி இடது கழுத்து எலும்பின் மேல் பகுதியில் மச்சம் எதுவும் இல்லை. அதேபோல, இடது முன்னங்கையில் எந்த காயத்தழும்பும் இல்லை.
உடலின் தோல் பகுதியில் மேற் பரப்பில் உள்ள சிறிய மச்சங்களை அகற்றிவிடலாம். பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் காயத் தழும்புகளை அகற்ற இயலாது. இந்த சிகிச்சை முறையில் காயத் தழும்பின் அளவைக் குறைக் கலாம்.
தோலின் மேல் பகுதியில் சிறிய மச்சமானது, லேசர் சிகிச்சை மூலம் அடையாளம் தெரியாத அளவில் நீக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான மச்சம் அகற்றப்பட்டிருந்தால், அதன் எச்சங்களை நுண்ணோக்கி மூலம் காண முடியும்.
ஒரு தழும்பை இப்போதுள்ள நவீன பிளாஸ்டிக் சர்ஜரி தொழில்நுட்பத்தால் அகற்ற முடியாது. ஆனால், அதன் அளவைக் குறைக்கலாம் என மருத்துவ அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கையில் சிறிய மச்சம் ஒன்று லேசர் சிகிச்சையில் அழிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிக்கையில் தனுஷ் உடலில் இருந்து மச்சம் அகற்றப்பட்டதாக நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை.
இதற்கிடையில், இந்த வழக்கை தொடர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி கூறியதாவது, நடிகர் தனுஷ் எங்கள் மகன்தான். மருத்துவ அறிக்கையில் தடயங் களை அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதில் இருந்து அவர் எங்கள் மகன் என்பது உறுதி ஆகிறது என்று கூறியுள்ளார்.