பிரபலங்களை நம் அருகில் பொது இடத்தால் பார்த்தால் இப்போதெல்லாம் ஒரு புகைப்படம் எடுக்கத் தான் தோன்றும். இன்றைய சமூகம் அப்படி மாற்றிவிட்டது. அவர்களுக்கு என்று சொந்த விஷயங்கள் இருக்கும், அவர்களுக்காக தனி இடம் கொடுக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வதில்லை.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் கவுண்டமணியை தொலைக்காட்சி நடிகர் ஒருவர் சந்திக்க, ஒரு செல்பி எடுக்கனும் சார் என்று கூறியுள்ளார்.
கவுண்டரின் மன்னனாச்சே நம்ம கவுண்டமணி. அவருக்கே உரித்தான ஸ்டைலில் தனக்கு முன்னால் கையை நீட்டி, அங்கே யாருமே இல்லை, போய் எடுத்துக்கோ என்று கூறியுள்ளார்.
உடனே அந்த ரசிகரும் கவுண்டமணிக்கு எதிரே சற்று தூரம் சென்று கவுண்டர் பின்புறத்தில் உட்கார்ந்திருக்க, அவர் முன்பு நின்று ஒரு செல்ஃபி எடுத்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.