நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, வெலிக்கடை சிறைச்சாலையில் தங்கியிருக்கும் அவரது சிறை அறையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
73 நாட்களாக தனக்கு பிணை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் இவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
மேலும், அவரது பிணை கோரிய மனுவை நேற்று(21) மேல் நீதிமன்றம் நிராகரித்தது.
எனினும், குறித்த பிணை கோரிய மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விமல் வீரவங்சவை விடுதலை செய்யுமாறு கோரியும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சார்பில் நீதியரசர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்பவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.