பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(24) முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளம்பரம் ஒன்றுக்காக தொலைக்காட்சி கூட்டுதாபனம் ஒன்றுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பான விசாரணைகள் குறித்தே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ குறித்த ஆணைக்குழுவிற்கு கடந்த 16 ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் சமூகமளிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.