சேயா கொலை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரினால் மனு விசாரணைக்கு…

கொட்டதெனியாய பகுதியை சேர்ந்த சேயா சந்தௌமி பாலியல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு, இன்று(24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனு உயர் நீதிமன்றத்தில் பிரதமர் நீதியரசர்களின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த இளைஞனிடம், சேயா கொலை சம்பவத்தை ஒத்துக் கொள்ளுமாறு பல அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாகவே இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுமி சேயா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு மரணத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)