குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே?

“நல்லாட்சி அரசாங்கம் உருவாகி 2 வருடங்களில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டையும், ஆதாரபூர்வமாக நிரூபிக்கமுடியவில்லை” என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்தார்.

காலி- ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள், இன்று வரை  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பில் நிரூபிக்கமுடியுமென்றால், அது என்ன என்று, கேள்வியெழுப்புகிறார்கள் எனத் தெரிவித்தர்.

மேலும், “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை விசாரணைக்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நிறுத்தினார்கள். ஆனால், எதுவும் நிரூபிக்க முடியவில்​லை” எனவும் குறிப்பிட்டார்.