ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் தலையீடு செய்யப் போவதில்லை – ஜனாதிபதி…

ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் தலையீடு செய்யப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சுப் பதவி மாற்றங்கள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தீர்மானிக்குமாறும் ஜனாதிபதி மேலும் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவிற்கு விஜயம் செய்ய முன்னதாக இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் காணப்படும் அமைச்சர்களின் எண்ணிக்கை வகிதத்தில் மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

(rizmira)