சுகாதார அமைச்சரையும் விட்டு வைக்காத டெங்கு

அண்மைக்காலமாக இலங்கையை அச்சுறுத்தும் விடயமாக டெங்கு நோய்த் தொற்று தீவிரம் அடைந்துள்ளது.

அதனை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அவர் தற்போது அவர் அதற்கான சிசிக்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு, மூன்று நாட்களான அவர் ஓய்வில் உள்ளார் என கூறப்படுகின்றது. எப்படியிருப்பினும் இந்த தகவல் உண்மையில்லை என மறுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சாதாரண வைரஸ் காயச்சலினால் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவரையில் உண்மை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.