AR முருகதாஸ் தயாரிப்பில் விஜய் மில்ட்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் ”10 என்றதுக்குள்ள ”.
இப் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் , D .இமான் இசையமைக்கிறார். படத்தில் சமந்தா இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் படப்பிடிப்புக்கள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தினை வருகின்ற காந்தி ஜெயந்தி (அக்டோபர் – 02 ) அன்று வெளியிடவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்குப் பின்பு விக்ரம் ஆனந்த் சங்கர் இயக்கும் ‘மர்ம மனிதன்’ எனும் புதிய படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.