தமிழ் – சிங்கள புத்தாண்டுப் பண்டிகையினை முன்னிட்டு, விசேட ரயில் சேவை…

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, விசேட ரயில் சேவையை நடத்தவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரை, குறித்த இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த சேவைகளானது, கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை, வெயாங்கொட, களுத்துறை தெற்கு, யாழ்ப்பாணம், மஹவ, காலி மற்றும் மாத்தறை போன்ற இடங்களுக்கிடையே முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 

(rizmira)