ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வெளிநாடு செல்ல இன்று(03) நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தனது மகளை பார்ப்பதற்காக இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவிற்கு செல்ல அவர் அனுமதி கோரியிருந்தார்.
இதன்படி, நீதிமன்ற பொறுப்பில் உள்ள திஸ்ஸ அத்தநாயக்கவின் கடவுச்சீட்டை அவரிடம் பெற்றுக் கொடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுவாராச்சி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போது எதிர்க் கட்சி தலைவராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினதும் கையொப்பங்களை போலியாக பயன்படுத்தி உடன்படிக்கை ஒன்றை உருவாக்கியமைக்கு எதிராக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.