ரதுபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இராணுவ அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு…

கடந்த ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட ரதுபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் மூவரும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா பிரதான நீதவான் ருவன்பத்திரன முன்னிலையில் அவர்களை முன்னிலைப்படுத்திய போதே குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நீதிமன்றத்திற்கு விளக்கமளித்த குற்றப்புலனாய்வு திணைக்களம், துப்பாக்கி பிரயோகத்திற்கு ஆணையிட்ட மற்றும் அந்த இடத்திற்கு இராணுவ வீரர்களை அழைத்த நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

(rizmira)