அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை எதிர்வரும் 5ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
அதனடிப்படையில் , இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 26ம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேபோல் , முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை இம்மாதம் 6ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இரண்டாம் தவணைக்காக எதிர்வரும் 19ம் திகதி அந்த பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.