தனியார் துறை நிறுவன பணியாளர்களின் ஆயுட் காப்புறுதியை கட்டாயப்படுத்த நடவடிக்கை…

பணியாளர்கள் 10 பேருக்கு அதிகமாக உள்ள தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் பாரிய திட்டங்களில் பணி செய்யும் பணியாளர்களின் ஆயுட் காப்புறுதியை கட்டாயப்படுத்தவுள்ளதாக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவு அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த தினங்களில் பாரிய திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களை கருத்தில் கொண்டு குறித்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பான சட்டத்தினை எதிர்காலத்தில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.

தற்போது ஏதோ ஒரு விபத்தால் பணியாளர் ஒருவர் உயிரிழந்தால், அதற்காக அதிகபட்ச இழப்பீடாக ஐந்தரை லட்சம் வழங்கப்படுகிறது.

எனினும் அதனை திருத்தி அந்த இழப்பீட்டை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(rizmira)