அமெரிக்காவில் கேக் சாப்பிடும் போட்டியொன்றில், இளம் மாணவி ஒருவர் கேக் துண்டு தொண்டையில் அடைத்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தோற்றத்தில் அழகானவர் மட்டுமன்றி படிப்பிலும் கெட்டிக்காரியான கெயிட்லின் நெல்சன் (20) அமெரிக்காவின் கொலம்பியா மருத்துவக் கல்லூரி மாணவி.
கல்லூரியில் அண்மையில் பான்கேக் சாப்பிடும் போட்டியொன்று நடைபெற்றுள்ளது.
இதில் கெயிட்லினும் கலந்துகொண்டுள்ளார். போட்டி ஆரம்பித்த சில நொடிகளில் மளமளவென கேக்குகளைச் சாப்பிட ஆரம்பித்த கெயிட்லின், நான்காவது துண்டைச் சாப்பிடும்போது எதிர்பாராத விதமாக கேக் அவரது தொண்டையில் சிக்கிக்கொண்டது.
அடுத்தடுத்து சாப்பிட்ட கேக் துண்டுகள் சரிவர உணவுக் குழாயினுள் இறங்காமல் சுவாசக் குழாயை அடைத்ததால் மூச்சுத் திணறி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக கெயிட்லினை வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றபோதும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.