இலங்கை மின்சார சேவையாளர் சங்கம் நாடுதழுவிய போராட்டத்தில்..

இலங்கை மின்சார சேவையாளர் சங்கத்தினர் நேற்று(05) நள்ளிரவு முதல் நாடுதழுவிய போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

வேதன பிரச்சினை தீர்க்கப்படாமை, ஆட்குறைப்பு போன்ற விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடாத்தப்படுவதாகவும், இந்த போராட்டத்தில் மின்சார சபை தொழிற்சங்க முன்னணி கலந்து கொள்ளாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிரியந்த விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்காவிடினும், அதற்கு தமது சங்கம் தடை ஏற்படுத்தாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(rizmira)