ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் எந்த மாற்றங்களும் தற்போதைக்கு இல்லை – சுஜீவ..

ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று(05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

செயற்குழுக் கூட்டத்தில் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரேணுகா ஹேரத் காலமானதை அடுத்து, வெற்றிடமாகிய செயற்குழுவின் உறுப்பினர் பதவியில் மாகாண சபையின் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

எதிர்வரும் மே தினத்திற்கு பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் பல மாற்றங்களை மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொன்னான காலம் ஆரம்பமாகும்.

பதவி மாற்றத்தின் போது கட்சியில் உள்ள திறமைமிக்க தலைவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)