நாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்லர் பங்களாதேஷ் அதிரடி – தலை குனிந்தது இலங்கை அணி..

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டியில் பங்களாதேஷ் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதன்படி , இலங்கைஅணிக்கு 177 என்ற ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை18 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதன்படி T20 தொடரை 1-1 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் சமன் செய்தது. முதல் T20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)