அதிவேக வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்..

அதிவேக வீதிகளில் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF)அதிகாரிகளை ஈடுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு குறித்த இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிவேக வீதியில் பயணிப்பதற்கு முன்னர் தங்கள் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அதிவேக வீதி பராரமரிப்பு முகாமையாளர் சமன் ஓப்பநாயக்க சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகள் ஏதாவது ஒரு தகவல் வழங்குவதற்கு அவசியம் என்றால் அதற்காக வீதியின் இரண்டு பக்கங்களிலும் உள்ள இலத்திரனியில் பலகைகளை பயன்படுத்துமாறும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)