ஸ்ரீ.ல.சு.கட்சியின் புதிய ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்..

குருநாகல் மாவட்டத்திற்கான ஸ்ரீ.ல.சு.கட்சியின் புதிய ஆசன அமைப்பாளர்கள் நான்கு பேர் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் மூன்று பேர் இன்று(11) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமிருந்து அமைப்பாளர்களுக்கான உத்தியோகபூர்வ கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளனர்.

தயாசிறி ஜெயசேகர பண்டுவஸ்நுவர, தர்மசிறி தசநாயக்க பிங்கிரிய, ஜயரத்ன ஹேரத் பொல்கஹவெல, லக்ஷ்மன் வெடறுவ குருநாகல் ஆகிய ஆசன அமைப்புகளுக்கு முறையே நியமிக்கப்பட்டுள்ளனர்.

குணதாஸ தெஹிகம, அனுராத சம்பத் ஹேவகே, எம்.எஸ்.எம்.பாஹிம் ஆகியோர் புதிய மாவட்ட அமைப்பாளர்களாக நியமனம் பெற்றுள்ளனர். குறித்த வைபவ நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் துமிந்த சில்வா அவர்களும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)