இந்திய அணிக்கு மூன்று வித போட்டிகளிலும் தலைவராக உள்ளார் விராட் கோஹ்லி. இவர் பிரபல மொடலும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார்.
மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் 20-வது தளத்தில் அனுஷ்கா சர்மா வசித்து வருகிறார்.
இந்நிலையில் மும்பை மாநகராட்சி அவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் மாநகராட்சி அனுமதியின்றி முறைகேடாக மின்சார இணைப்பு பெட்டி நிறுவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை அங்கு வசிக்கும் நபர் ஒருவர் தான் மாநகராட்சியிடம் புகார் அளித்துள்ளார்.
இதன் காரணமாகவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அதில், இது தொடர்பாக விரைவில் நேரில் ஆஜராகும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு அனுஷ்கார் சர்மா தான் மின்சார இணைப்பு பெட்டியை பொறுத்தவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.