கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவுக்குரிய முழுப் பொறுப்பையும் நகர அபிவிருத்தி அதிகார சபையே பொறுப்பேற்க வேண்டும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைக்கும் மாகாண சபைக்குமே குப்பைகளை அகற்றுவது தொடர்பிலான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும், நகர அபிவிருத்தி அதிகார சபை அந்த பொறுப்பில் கையாடல் செய்து வந்ததென அவர் மேலும் குறிப்பிட்டார்.
மீதொட்டமுல்ல குப்பைமேடு தொடர்பில் கடந்த காலத்தில் மேல் மாகாணசபை யோசனையொன்றை முன்வைத்ததாகவும், இருப்பினும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்பு இன்மையினால் குறித்த அந்த யோசனையை செயற்படுத்த முடியாமல் போனதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.