நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் நாளை ஆரம்பம்..

நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக, நாளை(19) மீளவும் திறக்கப்படவுள்ளன என, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த இப்பாடசாலைகள், ரமழான் நோன்பு விடுமுறைக்காக எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் 27ஆம் திகதி வரை மீண்டும் மூடப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரி, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, தர்கா நகர் தேசியக் கல்வியற் கல்லூரி என்பனவும் நாளை(19) திறக்கப்படவுள்ளன.

இதேவேளை, தமிழ், சிங்கள பாடசாலைகள், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக இம்மாதம் 26ஆம் திகதி திறக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)