பிலியந்தலை, கரதியான கழிவுக் கூடங்களுக்கான நுழைவாயிலின் முன்பாக, பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், கொழும்பிலிருந்து அங்கு சென்ற, 20 குப்பை பவுசர்களை திருப்பியனுப்பிவிட்டதோடு, அங்கு சுமார் 300-400 வரையிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
——————- UPDATE
குப்பைகளை பிலியந்தல – கரதியான பகுதியில் கொட்டுவதற்கு அப்பிரதேசவாசிகள் கடும் எதிர்ப்பு..
கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தல – கரதியான பகுதியில் கொட்டுவதற்கு அப்பிரதேசவாசிகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து இன்று(19) ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
வேரஹெர ரத்மலான பிரதான பாதையின் பொருபன பாலத்தினை மறித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.