மசகு எண்ணெய் சார் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில்.. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய நெரிசல்..

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள எண்ணெய் தாங்கிகளை விற்பனை செய்வதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மசகு எண்ணெய் சார் தொழிற்சங்கங்கள் நேற்று(23) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

தமது பிரச்சினைகள் தொடர்பில் இன்று(24) அமைச்சர் சந்திம வீரக்கொடியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தொழிற்சங்க ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் பந்துல சமன் குமார குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு முழுவதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)