விமல் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக முறைப்பாடு தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு..

விமல் வீரவங்ச உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக முறைப்பாடொன்றை தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இன்று(24) உத்தரவிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஐக்கிய நாடுகள் காரியாலயத்திற்கு முன்னாள், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராத் அல் ஹூசைனுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பௌத்தாலோக்க மாவத்தை மற்றும் ஹெவ்லொக் வீதியை மறைத்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விமல் வீரவங்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜயநாயக்க, மாகாண சபை உறுப்பினர் ரோஜர் சேனவிரத்ன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மெஹமட் முஸம்மில், சமிந்த ஜயலால் ஆகியோர் இதன் சந்தேக நபர்கள் ஆகும்.

இதேவேளை 7 ஆவது சந்தேக நபர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என காவற்துறை இன்று நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

அவரை கண்டறிந்த பின்னர் முறைப்பாட்டை தாக்கல் செய்யுமாறு காவற்துறைக்கு உத்தரவிட்ட நீதவான், 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் 8 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

(rizmira)