ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவரெட்டிய தொகுதியின் அமைப்பாளராக இந்திக நியமனம்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவரெட்டிய தொகுதியின் அமைப்பாளராக பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(24) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் தனது நியமனக் கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

(rizmira)