சுமார் 70 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 708g ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து இன்று(25) அதிகாலை 12.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர் கட்டுநாயக்க பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேகநபர் அந்நாட்டில் சாரதியாக பணியாற்றக் கூடியவர் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.