பெற்றோலிய தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பிரதமர் வளைந்து கொடுத்தார்..

பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(24) இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

தங்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்ததாக இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பெற்றோலிய கூட்டுத்தாபன கிளையின் உபதலைவர் பிரேமஜயந்த கமகே தெரிவித்தார்.

இது தொடர்பான எழுத்துமூல வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து பணிப்பகிஷ்கரிப்பை கைவிட தீர்மானித்துள்ளதகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

(rizmira)