மீதொட்டுமுல்ல அனர்த்தம் குறித்து விசேட நாடாளுமன்ற அமர்வு..

மீதொட்டுமுல்ல அனர்த்தம் குறித்து விசேட நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 28 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது விவாதிக்கப்படவேண்டிய விடயங்கள் சம்பந்தமாக இன்று(26) காலை நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

மீதொட்டமுல்ல குப்பைமேடு கடந்த 14 ஆம் திகதி சரிந்து விழுந்தது. இதில் சிக்குண்டு 32 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்துள்ளதுடன், 8 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனர்த்தத்தின் பின்னர் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை மீதொட்டமுல்லவில் கொட்டுவது நிறுத்தப்பட்டு, அதற்கு அரசு மாற்று இடங்களையும் தெரிவு செய்திருந்ததை அடுத்து அப்பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.

இந்நிலையில், விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்தார்.

(rizmira)